அரசு மருத்துவனையில் குளிர்விப்பான் பழுது: ஐஸ் கட்டி மீது இறந்த உடலை வைக்கும் அவலம்
அரசு மருத்துவனையில் குளிர்விப்பான் பழுது: ஐஸ் கட்டி மீது இறந்த உடலை வைக்கும் அவலம்
யானம் அரசு மருத்துவனை
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றுப் பகுதியில் உள்ளது. இங்க உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் ஏசி இயந்திரம் பழுதாகி பல மாதம் ஆகிறது.
புதுச்சேரி ஏனாம் அரசு மருத்துவனையில் காணப்படும் அவலத்தை ஒரு புகைப்படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றுப் பகுதியில் உள்ளது. இங்கே உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் ஏசி இயந்திரம் பழுதாகி பல மாதம் ஆகிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.அரசுக்குரிய தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
இதற்கு மாற்றாக இறந்தவர்களின் உடல் ஐஸ் பார் மீது வைக்கப்படும் நிலை உள்ளது. பழங்கால முறைக்கு புதுச்சேரியின் ஏனாம் மருத்துவமனை திரும்பி இருப்பது மிக பெரிய வேதனை. இந்த நிலை பல மாதங்களாக நீடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் ஏசி இயந்திரத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஐஸ் கட்டி மீது பிரேதம் வைக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்தவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.
புதுச்சேரி ஏனாம் அரசு மருத்துவனையில் காணப்படும் அவலத்தை ஒரு புகைப்படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.