கொரோனாவால் வேலையிழப்பு: ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது

ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர்

கொரோனாவால் வேலையிழந்ததன் காரணமாக புதுச்சேரியிலும் விழுப்புரத்திலும் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
புதுச்சேரி கிருமாம்பாக்கம் தண்ணீர் தொட்டி வீதியைச் சார்ந்தவர் லட்சுமணன். கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்டன்டெராகப் பணியாற்றி வருகின்றார். ATM-ல் பணம் எடுக்கத் தெரியாத அவர் தெரிந்தவர்களை அழைத்துச் சென்று பணம் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது ATM  சென்றுள்ளார். அங்கு பணம் எடுக்க ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அவர் ரகசிய இலக்கத்தைப் போட்டுவிட்டு வேலை செய்யவில்லை என்று கூறியதால் லட்சுமணன் சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் தனது வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்செய்தி வந்துள்ளது.

Also read: கொரோனா சிகிச்சை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரே வழிமுறையில் சிகிச்சை

இதனால் மீண்டும் அரியாங்குப்பம் வந்த அவர், வங்கியில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அரியாங்குப்பம் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு போலி ATM  கார்டைக் கொடுத்துப் பணம் திருடிய மதிகிருஷ்ணபுரம் பகுதியைச் சார்ந்த முருகன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50,000 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் சென்னையில் உணவகத்தில் பணியாற்றிய முருகன், கொரோனா நோய் பரவலால் வேலையிழந்ததன் காரணமாக பணம் சம்பாதிப்பதற்கு இதேபோல கடலூரிலும் விழுப்புரத்திலும் ATM  மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
Published by:Rizwan
First published: