குடியிருப்புக்குள் மாடு வந்ததால் வாக்குவாதம்... வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்

குடியிருப்புக்குள் மாடு வந்ததால் வாக்குவாதம்... வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்
வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்
  • News18
  • Last Updated: September 22, 2020, 8:25 PM IST
  • Share this:
புதுச்சேரியில் வயதான தம்பதியரை செருப்பால் அடித்த அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி  தட்டாஞ்சாவடி சேர்ந்தவர் சுப்புராயன் 65,  இவரது மனைவி லட்சுமி 59.  ஜெயாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி சுப்புராயான் காவலராக பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, ராமலிங்கநகரை சேர்ந்த சரவணன்(55) என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் மாடுகள் அடிக்கடி, அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைவது வழக்கமாக இருந்துள்ளது.


Also read... தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..

இதனால்  கணவன், மனைவி இருவரும் மாடுகளை குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க சரவணனிடம் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சரவணன், நடு வீதியில் வயதான தம்பதியரை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.

இக்காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக சுப்புராயன்அளித்த புகாரின் பேரில் தன்வந்திரி நகர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வருகின்றனர்.போலீசாரால் தேடப்பட்டு வரும் சரவணன் புதுச்சேரி அரசின் பொதுபணித்துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading