புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சிட்டுக்குருவிகளுக்கு கூடு பொருத்திய தமிழிசை

தமிழிசை செளந்தராஜன்

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு தமிழிசை செளந்தரராஜன் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கான கூண்டுகளை மரங்களை பொருத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

 • Share this:
  இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். பண்டைய காலம் முதலே சிட்டுக்குருவிகள் மனிதர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் சிட்டுக்குருவிகளை அதிகம் பார்க்கமுடிகிறது. தானியங்கள், புழுக்கள், விதைகளை இவை உணவாக உட்கொள்கின்றன. இரைச்சல் மிக்க நகர்புறத்தில் இவை அதிகம் காணப்படுவதில்லை. புறநகர் பகுதிகளில் சிட்டுக்குருவிகளை காண முடியும். அங்குதான் அவற்றின் உணவான பூச்சிகள், தானியங்கள் அவற்றுக்கு கிடைக்கின்றன. இவை மரங்கள், வீடுகளில் வைக்கோல் போன்ற மெல்லிய பொருள்களைக் கொண்டு கூடு கட்டி வசிக்கின்றனர். குளிர்காலங்களில் ஏராளமான சிட்டுக்குருவிகள் ஒரே கூட்டில் அடைகின்றன.

  நகரமயமாதல் காரணமாக சிட்டுக்குருவி இனங்கள் அழிவை நோக்கி செல்கின்றன. இந்த இனத்தை காக்கும்பொருட்டு மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடி வருகின்றனர். உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் மாளிகையில் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கான கூண்டுகளை மரங்களை பொருத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

     இதுதொடர்பான ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழிசை, “இன்று உலக மகிழ்ச்சி தினம்.. நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய சிட்டுக்குருவிகள் தினமும்கூட .. மகிழ்ச்சியாக இருப்போம்.. சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.. ” எனப் பதிவிட்டுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: