புதுச்சேரி பிரஞ்சு சிட்டி அஜித் ரசிகர் மன்றம் சார்பில் அஜித்தின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பிரஞ்சு சிட்டி அஜித் ரசிகர் மன்றம் சார்பில் புதுச்சேரியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
கொரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்தல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்குதல் ஆகியவைகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித்தின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற ரத்ததான முகாமை புதுச்சேரியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் போக்குவரத்து காவலர் முருகன் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ரத்தம் வழங்கினர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.