புதுச்சேரியில் ஒரே நாளில் 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!
புதுச்சேரியில் ஒரே நாளில் 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!
கோப்புப் படம்
மாநிலத்தில் இதுவரை 1,40,031 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,57,698 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஒரே நாளில் 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 635 நபர்களுக்கும், காரைக்காலில் 234 பேர், ஏனாமில் 57 பேரும், மாஹேவில் 14 பேர் என மொத்தம் 940 நபர்கள் கொரோனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் தற்போது 15,751 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 1,916 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மாநிலத்தில் இதுவரை 1,40,031 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,57,698 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,19,304 பேரும், இரண்டாம் தவணை 6,02,304 பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 6,210 பேர் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக 15,27,818 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.