• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு வெடித்து 7 வயது மகன், தந்தை உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு வெடித்து 7 வயது மகன், தந்தை உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு வெடித்து 7 வயது மகன், தந்தை உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு வெடித்து 7 வயது மகன், தந்தை உயிரிழப்பு!

புதுச்சேரி அருகே இரண்டு சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென வெடித்ததால் தந்தை- மகன் சம்பவ இடத்திலே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன்(37) இவர் தமிழகப்பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணாவை பார்ப்பதற்காக சென்று விட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடம் தீபாவளி கொண்டாட இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி வந்தார்.

    அப்போது புதுச்சேரி அருகேவுள்ள விழுப்புரம் மாவட்டமான கோட்டக்குப்பம் கிழக்குக்கடற்கரை சாலை சந்திப்பில் வந்துகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக, இரண்டு சக்கரவாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென வெடித்ததில் தந்தையும், மகனும் தூக்கி வீசப்பட்டனர்.



    இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். அருகே இருந்த வாகனம் மற்றும் வீட்டின் கூறைகள் சேதமடைந்து அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

    இந்த வெடிவிபத்து சம்பவம் நடைபெறும்போது அந்த சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால் இருமாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடிவிபத்து குறித்து விசாரனை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விழுப்புரம் டிஐஜி பாண்டியன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: