• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தனக்கு பதிலாக ஓட்டு போட்டது யார்? கொந்தளித்த வாக்காளர் : புதுச்சேரியில் ஒரு 49P சம்பவம்

தனக்கு பதிலாக ஓட்டு போட்டது யார்? கொந்தளித்த வாக்காளர் : புதுச்சேரியில் ஒரு 49P சம்பவம்

வாக்காளர் குமார்

வாக்காளர் குமார்

புதுச்சேரியில் வாக்காளர் அடையாள அட்டை காட்டி ஓட்டுப்போட அனுமதிக்கும்படி வாக்காளர் குமார் கேட்டபோது, அங்கிருந்த தேர்தல் அலுவலர், உங்கள் ஓட்டு ஏற்கனவே பதிவாகிவிட்டது. 2 ஆவது முறையாக ஓட்டுப்போட முடியாது என தெரிவித்தார்.

  • Last Updated :
  • Share this:
புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் குமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி மணிமேகலை, மகள்கள் சுஷ்மிதா, திவ்யா ஆகியோருடன் நெல்லித்தோப்பு பெரியார் நகர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடிக்கு வந்தார்.

அங்கு பூத் சிலிப், அடையாள அட்டை காட்டி ஓட்டுப்போட அனுமதிக்கும்படி கேட்டார். அப்போது அங்கிருந்த தேர்தல் அலுவலர், குமாரின் ஓட்டு ஏற்கனவே பதிவாகிவிட்டது. 2ஆவது முறையாக ஓட்டுப்போட முடியாது என தெரிவித்தார்.

நாங்கள் குடும்பத்தோடு தற்போதுதான் வாக்களிக்க வந்துள்ளோம். எங்களை அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஓட்டுச்சாவடி பாதுகாப்பு போலீஸ் அதிகாரி அவர்களை சமாதானப்படுத்தி தேர்தல் அதிகாரியிடம் அழைத்துச்சென்றார்.

தனக்கு பதிலாக ஓட்டளித்தவர் யார்? அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள். என்னை ஓட்டு போட அனுமதித்தால் அந்த ஓட்டை எப்படி அழிப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள், மொத்தமாக வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், கண்காணிப்பு கேமிரா மற்றும் வாக்குப்பதிவான நேரத்தின் அடிப்படையில், அதிகமாக பதிவான ஒரு வாக்கை நீக்குவதாக கூறியுள்ளனர்.



ஆனால், இதனை ஏற்க மறுத்த வாக்காளர் குமார், தனது வாக்கு தவறாக பதிவானதிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அத்துடன் வாக்காளர் குமார் வாக்குச்சாவடியிலேயே காத்துக் கொண்டிருந்தார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

Must Read :  புதுச்சேரியில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்களின் கார்கள் உடைப்பு

 

இதனத் தொடர்ந்து, 2 மணி நேரத்திற்கு பின்னர், தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபடும் என்ற கோரிக்கையை ஏற்று, தேர்தல் நடத்தை விதி 49p பிரிவின் கீழ் வாக்குச்சீட்டு முறைப்படி குமார் வாக்களித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: