ஆயூஷ்மான் திட்டத்தில் சேர ஒரே நாளில் 4000 பேர் விண்ணப்பம்..!

உரிய ஆவணங்களைப் பெற்று இணையதளம் மூலம் விண்ணப்பித்து 3500 பேரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாக மாற்றியுள்ளனர் பாஜகவினர்.

ஆயூஷ்மான் திட்டத்தில் சேர ஒரே நாளில் 4000 பேர் விண்ணப்பம்..!
பாஜக நிர்வாகிகள்
  • Share this:
புதுச்சேரியில் ஆயூஷ்மான் திட்டத்தில் சேர ஒரே நாளில் 4000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட வானூர் தாலுகாவின் கீழ் 64 பஞ்சாயத்துகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் மத்திய அரசின் ஆயூஷ்மான் எனும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் அப்பகுதிகளில் பாஜகவின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கடந்த வாரம் ஆட்டோ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதையடுத்து ஒரே நாளில் 4000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக தனி அலுவலகம் அமைத்து பாஜகவினர் உரிய ஆவணங்களைப் பெற்று இணையதளம் மூலம் விண்ணப்பித்து 3500 பேரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாக மாற்றியுள்ளனர்.


இதற்கு முன் மருத்துவக் காப்பீட்டு திட்டம் பற்றி தெரியாத வானூர் தாலுகா மக்கள் எளிதில் பயனாளிகளாக அட்டை பெற்றிருப்பதாக மகிழ்வுடன் தெரிவிக்கின்றனர்.

Also see:
 
First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading