Puducherry : புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

32 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

முதலமைச்சர் ரங்கசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்று செய்து கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர்.

  • Share this:
புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகரான லட்சுமி நாராயணனுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி ஏற்கும் விழா
சட்டசபையில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்தது. வழக்கமாக சட்டசபையில்தான் எம்எல்ஏக்கள் பதவியேற்பு நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக சபாநாயகர் அறையில் எளியமுறையில் விழா நடந்தது.

முதல் நபராக முதலமைச்சர் ரங்கசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்று செய்து கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து எம்எல்ஏக்கள் தனித்தனியே சபாநாயகர் அறைக்கு வந்து எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர். என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, சுயேச்சை எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

மேலும் படிக்க... Puducherry : புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் பதவியேற்பு...

எம்எல்ஏக்கள் பதவியேற்கும்போது அவர்களின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களோடு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர். எம்எல்ஏக்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை வளாகத்துக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: