குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

news18
Updated: April 7, 2019, 2:12 PM IST
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது!
கைதான மூன்று பேர்
news18
Updated: April 7, 2019, 2:12 PM IST
புதுச்சேரியில் 15 வயது மாணவியை கடத்தி, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் மாட்டுக்காரன் சாவடி பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மூன்று இளைஞர்கள் கடத்திச் சென்று சேதராபட்டில் உள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் வைத்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துகொடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

படிக்க... பொள்ளாச்சியில் மாணவி கொலை: பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?

மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர்.

பின்னர், விசாரணை நடத்தி நரேஷ்(18), வெங்கடேசன் (எ) சூர்யா(21), ராக்கெட் ராஜா (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Also See...
Loading...
First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...