Home /News /national /

புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் 18 கிலோ தங்கம் பறிமுதல்..

புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் 18 கிலோ தங்கம் பறிமுதல்..

Youtube Video

புதுச்சேரியில் மாகி பகுதியில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பிடிப்பட்டுள்ளது.

    கேரளத்தின் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான மாஹே பகுதியில் 18 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. இந்த நகைகள் பிரபல நகைக்கடைக்கு சொந்தமானது என சில ஆவணங்களை காட்டப்பட்டாலும் வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கேரள மாநிலத்தின் அருகேயுள்ள புதுச்சேரியின் பிராந்தியமான மாஹே பகுதியில் தேர்தலை முன்னிட்டு 6 எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரவு பகலாக வாகன தணிக்கை நடந்து வருகிறது. இந்தநிலையில் இன்று காலை
    புரவிபுழா என்னும் சோதனை சாவடியில் மகாராஷ்டிர நம்பர் கொண்ட வேன் பிடிப்பட்டது. அப்போது சோதனையில் 18 கிலோ தங்கம் சிக்கியது. 9 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த தங்கம் கேரளா மலபார் கோல்ட் தங்க நகை கடைக்கு சொந்தமானது.
    இத்தகவல் அறிந்து வருமானவரித் துறை அதிகாரிகளும் GST அதிகாரிகளும் நேரில் வந்து விசாரணை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபற்றி, மாஹே உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வாகனத்தில் 18 கிலோ தங்கம் இருந்தது. அவர்கள் அப்பகுதியில் உள்ள பிரபல நகைக்கடைக்கு சொந்தமானது என்று தெரிவித்தனர். இத்தங்கத்தை தங்களின் கண்ணூர் அலுவலகத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். இதற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறது. இருந்தாலும் வருமானவரித்துறை ஆய்வுக்கு உட்படுத்த, தங்கத்தை வாகனத்துடன் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்" என்று தெரிவித்தனர்.

    மேலும் படிக்க.. திருப்புமுனை: ஜெயலலிதாவுக்கு காத்திருந்த முதல் சவால்..



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Gold, Puducherry

    அடுத்த செய்தி