தேர்தலையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு!

இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ம் தேதி காலை 6 மணி வரையில் இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்

Web Desk | news18
Updated: April 16, 2019, 11:25 AM IST
தேர்தலையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு!
புதுச்சேரி
Web Desk | news18
Updated: April 16, 2019, 11:25 AM IST
புதுச்சேரியில் தேர்தல் நேர பணப்பட்டுவாடாவைத் தடுக்க இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு விதிக்கப்பட உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் பணப்பட்டுவாடா நடப்பதைத் தவிர்க்கவும் தேர்தலை நியாயமான முறையில் வழிநடத்த உதவவும் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ம் தேதி காலை 6 மணி வரையில் இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் புதுச்சேரி ஆட்சியர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.

144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது பொது இடங்களில் ஒரே இடத்தில் ஐந்து பேருக்கும் மேல் கூடுவதும் ஆயுதங்கள், அரசியல் பேனர்கள், ஒலிபெருக்கிகள் பயன்பாடு ஆகியவற்றுக்கும் புதுச்சேரி முழுமைக்குமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: நாளை மறுநாள் தேர்தல்... தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை சோதனை தீவிரம்...!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...