Home /News /national /

ஒரே நாளில் புதுச்சேரியில் 1130 பேருக்கு கொரோனா தொற்று - 2 பேர் உயிரிழப்பு!

ஒரே நாளில் புதுச்சேரியில் 1130 பேருக்கு கொரோனா தொற்று - 2 பேர் உயிரிழப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 1,908 ஆக உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 906 நபர்களுக்கும், காரைக்காலில் 167 பேர், ஏனாமில் 140 பேர், மாஹேவில் 13 பேர் என மொத்தம் 1130 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது 15,652 நபர்கள் கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 1,908 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 1,35,783 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,53,343 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Also read... புதுச்சேரி ஊரடங்கில் ஒரு பக்கம் அடைப்பு - மறுபக்கம் திறப்பு!

மாநிலத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,17,394 பேரும், இரண்டாம் தவணை 5,99,328 பேரும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 5,281 பேர் செலுத்திக்கொண்டனர். மொத்தமாக 15,22,003 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona, Corona death, Puducherry

அடுத்த செய்தி