ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆட்சிகவிழ்க்கப்பட்ட புதுச்சேரி... அரியணை யாருக்கு... எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன

ஆட்சிகவிழ்க்கப்பட்ட புதுச்சேரி... அரியணை யாருக்கு... எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன

புதுச்சேரி

புதுச்சேரி

கடந்த தேர்தலில் டெப்பாசிட்டே வாங்காத பா.ஜ.க ரங்கசாமியை கேப்டன் என்று அறிவிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் தற்போது அம்மாநிலம் மீண்டும் தேர்தலை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கும். என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி அமைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ கட்சிகள் இடம்பெற்றுள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பா.ஜ.க-வும் அ.தி.மு.க.வும் உள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் முடிவெடிக்கும் சக்தியாக பாஜக உள்ளது. பாஜகவுக்கு புதுச்சேரியில் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட இல்லை என்பது கவனித்தக்கது. நியமன எம்.எல்.ஏக்களை வைத்து தான் பா.ஜ.க அங்கு காய்நகர்த்தியது. துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், நாராயணசாமிக்கும் இடையேயான மோதல் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்தது. கடைசியில் அங்கு ஆட்சி கவிழ்ந்ததுதான் மிச்சம்.

  என்.ஆர்.காங்கிரஸை நம்பித்தான் பாஜக தேர்தலை சந்திக்கிறது. கேப்டன் ஆஃப் தி ஷிப் யாரென்றால் அது ரங்கசாமிதான். கடந்த தேர்தலில் டெப்பாசிட்டே வாங்காத பா.ஜ.க ரங்கசாமியை கேப்டன் என்று அறிவிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. பா.ஜ.க தலைவர் நமச்சிவாயம் டெப்பாசிட் வாங்குவாரா என்று அக்கட்சியினரே பேசி வருகின்றனர். இருந்தாலும் முதல்வர் கனவில் மிதக்கிறது பா.ஜ.க மேலிட தலைமை. என்.ஆர்.காங்கிரஸோ தேர்தலில் வெற்றிப்பெற்றால் ரங்கசாமி தான் முதலமைச்சர் என்பதில் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் நாராயணசாமி இம்முறை போட்டியிடவில்லை. புதுச்சேரியில் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டதாக திமுக-கவுக்கு தகவல் வந்தநிலையில் புதுச்சேரியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க.

  என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி

  என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பாஜக இருப்பது ரங்கசாமிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. ரங்கசாமி தான் போட்டியிடும் தொகுதியில் எளிதில் வெற்றிப்பெற்று விடுவார். அமைச்சரவையை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க குறியாக செயல்படும். ரங்கசாமியால் தன்னிச்சையாக செயல்படமுடியுமா என்பதே கேள்விக்குறித்தான். இது ரங்கசாமிக்கு தெரியும். அவர் தன்னுடைய எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதிலே தனி கவனம் செலுத்த வேண்டும். இன்று புதுச்சேரி பாஜகவில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்கள். முதல்வர் பதவியை ரங்கசாமி எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார். சூழலை புரிந்து பாஜக இணக்கமாக செயல்பட்டால் இருவருக்கும் நல்லது. மாநிலங்களில் தேக்கம் அடைந்துள்ள பணிகள் எந்த தடங்களும் இல்லாமல் நடைபெறும். புதுச்சேரி மக்களுக்கு நல்லது நடக்கும். பாஜக முரண்டு பிடித்தால் இன்னொரு ஆட்சி கவிழ்ப்பு கூட நிகழலாம். அரசியல் ஆட்டத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கூட ஆட்சியை நடத்தலாம்.

  காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி வெற்றிப்பெற்றால்

  இந்தக் கூட்டணி வெற்றிப்பெற்றால் வேட்பாளர்களை முதலில் தக்கவைத்துக்கொள்ள போராடவேண்டும். துணை நிலை ஆளுநரின் அதிகாரப்போக்கு காணப்படலாம். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இந்த மோதல்போக்கு சர்வசாரணமாக நடந்து வருவதை பார்க்க முடிகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இத்தனை நாள்களாக இதுதானே நடந்து வந்தது. இதை தாங்கிக்கொள்ள புதுச்சேரி மக்களுக்குத்தான் சக்தி வேண்டும். புதுச்சேரியை பொறுத்தவரையில் ஆட்சியாளர்களைவிட மக்களுக்குத்தான் சவால் காத்திருக்கிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  மக்களின் தீர்ப்பை அறிய மே 2ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்

  தேர்தல் முடிவுகளை News18Tamil.com ல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இணைந்திருங்கள் ...

  Published by:Ramprasath H
  First published:

  Tags: ADMK, BJP, Congress alliance, DMK, Election 2021, Pudhucherry