• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளாவில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி - சமூக ஆர்வலர்கள் கண்டனம்

கேரளாவில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி - சமூக ஆர்வலர்கள் கண்டனம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்களை 11ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.

  • Share this:
    கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் கேரளாவில் சுற்றுலாதலங்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகைக்காக வணிக வளாகங்களும் விரைவில் திறக்கப்படவுள்ளன.

    கேரளாவில் தினமும் 20 ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. எனினும் மாநில அரசு, தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதிய தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், “கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்களை 11ஆம் தேதி புதன் கிழமை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். கடைகளுக்கு அளிக்கப்பட்ட அதே கட்டுப்பாடுகள் மால்களுக்கும் பொருந்தும். ஏ.சி. இல்லாத ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

    கேரளாவில் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

    Must Read : ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய வீரர்களுக்கு இலவச விமானப் பயணம்

    சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல தடையில்லை. ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் சுற்றுலா மையங்களில் உள்ள ஹோட்டல் அறைகளில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக சுற்றுலா துறையில் மட்டும் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார் முகமது ரியாஸ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கேரளாவில் தொற்று அதிகரிக்கும் நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைகள், வங்கிகள் ஆகியவற்றுக்கு செல்வோர் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: