இந்தியாவில் இன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாகத் தடை..

கோப்புப்படம்

இந்திய மொபைல் போன்களில் இனி பப்ஜி முற்றிலும் செயல்படாது. இந்திய சர்வர்கள் முழுமையாக முடக்கப்படுவதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  இன்று முதல் இந்தியாவில் பப்ஜிக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே டவுன்லோட் செய்தவர்கள் பப்ஜியை தற்போது வரை பயன்படுத்தி வந்தனர்.

  இந்நிலையில், பப்ஜி விளையாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த லிவிக் மற்றும் பப்ஜி மொபைல் ஆகிய இரு சர்வர்களும் முற்றிலுமாக முடக்கப்படுவதாக அந்நிறுவனம், தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

  மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட 116 மொபைல் செயலிகளுக்கு அண்மையில் தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த செயலிகளின் பயன்பாடுகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்த்து.

  ALSO READ | ஸ்கார்பியோ காரின் வடிவத்தில் வீட்டின் மாடியில் க்ரியேட்டிவ் தண்ணீர் தொட்டி வடிவமைத்த நபர்..

  தென் கொரிய வீடியோ கேம் நிறுவனமான கிராப்டன் கேம் யூனியனின் துணை நிறுவனம் PUBG கார்ப்பரேஷன் என்றாலும், சீனாவின் டென்சென்ட் கேம்ஸிடம் இதன் விநியோக உரிமைகள் இருந்தன. ஆனால் மத்திய அரசின் இந்த உத்தரவிற்குப் பிறகு டென்சென்ட்டுடனான தனது ஒப்பந்த்த்தை பப்ஜி நிறுவனம் ரத்து செய்தது.

  இதன்பின்னர், பப்ஜி செயலியை மீண்டும் இந்தியாவில் கொண்டுவர நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பீட்டல் ராயலே கேம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், இந்திய சர்வர்கள் முழுமையாக முடக்கப்படுவதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  ALSO READ |  'மரியோ கார்ட்' கேம் சவுண்ட்டிராக்குடன் வீட்டுப் பாடத்தை விரைவாக முடிக்கும் மாணவர்கள்..

  சர்வதேச அளவில் ஐந்து கோடி பேர் பப்ஜி விளையாடுகின்றனர். இதில் இந்தியாவில் மட்டுமே 3.3 கோடி பயனர்கள் இருக்கின்றனர். இந்த ஆண்டின் முதல் பாதியில் பப்ஜி மொபைல் மூலம் அந்நிறுவனத்துக்குக் கிடைத்த வருமானம் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.9,731 கோடி. இதுவரை பப்ஜி ஆட்டத்தின் மூலம் ரூ.22,457 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  இந்தியாவில்தான் இந்த விளையாட்டை அதிகம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். குறிப்பாக ஊரடங்கு சமயத்தில் 17.5 கோடி முறை இந்த விளையாட்டை டவுன்லோடு செய்யப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன .

   
  Published by:Sankaravadivoo G
  First published: