முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேர்தல்... முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேர்தல்... முதல் பெண் தலைவராக பி.டி.உஷா தேர்வு

பிடி.உஷா

பிடி.உஷா

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் முதன்முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆசிய தடகள போட்டியில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ள பி.டி.உஷா, 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வதாக வந்து நூல் இழையில் வெண்கலப்பதக்கத்தை இழந்தார்.

top videos

    பி.டி. உஷா தவிர மூத்த துணைத் தலைவராக அஜய் பட்டேல், துணைத் தலைவர்களாக ககன் நரங், ராஜலட்சுமி சிங் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர். பொருளாளராக சக்தேவ் யாதவ், இணை செயலாளராக கல்யாண் சவ்பே ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் அதிகமான பெண்கள் தேர்வாகியுள்ளதற்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் நீட்டா அம்பானி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Olympic 2024, Sports, Sports Player