Home /News /national /

அண்ணனின் இரண்டு குழந்தைகள் கொலை: மேலும் மூவரைக் கொல்ல திட்டம் - சைக்கோ கொலையாளி கைது

அண்ணனின் இரண்டு குழந்தைகள் கொலை: மேலும் மூவரைக் கொல்ல திட்டம் - சைக்கோ கொலையாளி கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உத்தரப் பிரதேசத்தில் இரு சிறுவர்களைக் கொன்றுவிட்டு, மேலும் மூவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்திலுள்ள தர்மபூர் எனும் கிராமத்தில் ராதே ஷியாம் எனும் 30 வயது இளைஞர் தன் உடன் பிறந்த அண்ணனின் குழந்தைகள் இருவரைக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பேரதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    சைக்கோ கொலையாளி ராதே ஷியாம் கடந்த பிப்ரவரி 4ம் தேதி தன் உடன் பிறந்த சகோதரரின் 6 வயது மகன் சத்யேந்திராவையும் ஜூன் 9 அன்று தனது உறவினர் ரகுராஜ் சிங்கின் மகன் பிரஷாந்தையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். காவல்துறை அதிகாரி கிரித்பால் சிங் கூறும்போது, ஜுன் 11ம் தேதி ராதே ஷியாம் தன் அண்ணன் விஷ்வநாத் சிங் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரைக் கொல்ல முயன்றுள்ளார்; நல்லவேளையாக உறவினர்களை அவரை மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துவிட்டனர் என்கிறார்.

    Also see:

    போலீசார் கொலையாளியிடம் விசாரித்தபோது, இப்படி கொலை செய்வது தனக்குப் ‘பிடித்திருக்கிறது’ என்று கூறியுள்ளார். எட்டா காவல்துறை எஸ்.பி, “குற்றம் சாட்டப்பட்டவர் தன் உறவினர் இருவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இன்னும் மூவரைக் கொல்ல இருந்ததாகவும் கூறினார். கொலை செய்வதில் ஆனந்தம் கொள்ளும் சைக்கோ கொலையாளி அவர்” என்று கூறினார்.

    முன்னதாக, சிறுவன் சத்யேந்திரா கொலைக்காக ஒரு பெண் உட்பட மூவரை போலீசார் சிறை வைத்திருந்தனர். அதேபோல், மற்றொரு சிறுவன் பிரசாந்த் கொலை தொடர்பாக மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ராதே ஷியாம் கைது செய்யப்பட்டதற்குப் பின், இவர்கள் அனைவர் மீதும் உள்ள வழக்குகளைத் திரும்பப்பெறவும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கொலையாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Uttar pradesh

    அடுத்த செய்தி