PSLV C-52 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி 3 செயற்கைகோள்களை இஸ்ரோ நிலை நிறுத்தியுள்ளது. நடப்பாண்டின் முதல் வெற்றிகரமான ஆபரேஷனாக இது அமைந்துள்ளது என இஸ்ரோ அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி - 52 ராக்கெட் இன்று காலை 5.59-க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதையொட்டி 25 மணி நேரம் 30 நிமிடங்கள் கொண்ட கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 4.29-க்கு தொடங்கப்பட்டது.
மொத்தம் 1,710 கிலோ எடை கொண்டதாக இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. .
புவி ஆய்வு செயற்கைக்கோள் EOS - 04, INS-2TD எனப்படும் தொழில்நுட்ப பயன்பாட்டு செயற்கைகோள், INSPIREsat-1 என்ற இஸ்ரோவின் இளநிலை செயற்கைகோள் ஆகியவை பூமியில் இருந்து 529 கிலோ மீட்டர் தூரம் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க -
கொரோனாவை விட பெரிய ஆபத்து காத்திருக்கிறது!
இவற்றில் இ.ஓ.எஸ். - 04 செயற்கைகோள் சுமார் 10 ஆண்டுகள் விண்ணில் நிலை பெற்று தகவல்களை அளித்துக் கொண்டிருக்கும். இதில் அதிக எச்.டி. கொண்ட கேமராக்கள் ரேடார் தொழில் நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து எடுக்கப்படும் புவியின் புகைப்படங்கள் விவசாயம், வனத்துறை, காடுகள் வளர்த்தல், வெள்ள பாதிப்புகளை கண்டறிதல், மண் வளம் மற்றும் நீரியல் துறை என பல்வேறு பயன்பாட்டிற்கு உபயோகமாக அமையும்.
ஐ.என்.எஸ். -2 டிடி செயற்கைகோள் இந்தியா மற்றும் பூடானின் கூட்டு செயற்கைகோள ஆகும். இது, நிலம் மற்றும் நீர் மேற்பரப்பு வெப்பநிலை, பயிர்கள், வனம் மற்றும் வெப்ப நிலைத்தன்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்யும்.
இதையும் படிங்க -
மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநர்... பரபரப்பு
INSPIREsat-1 என்பது இந்தியன் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Indian Institute of Space Science and Technology) செயற்கைகோள் ஆகும். அமெரிக்காவின் இது கொலரோடா பல்கலைக் கழகத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சூரியனின் வெப்பநிலை அதன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.