இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்!

உலகிலேயே முதல் முறையாக 3 வெவ்வேறு புவி வட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்களை இஸ்ரோ புதுமுயற்சியாக செலுத்துகிறது.

Web Desk | news18
Updated: April 1, 2019, 8:07 AM IST
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்!
பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்
Web Desk | news18
Updated: April 1, 2019, 8:07 AM IST
எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் இன்று காலை 9.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, உலகிலேயே முதல் முறையாக 3 வெவ்வேறு புவி வட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்களை செலுத்தி இன்று காலை நிலைநிறுத்தவுள்ளது.

காலையில் 9 மணி 27 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 6.27 மணிக்குத் தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த எமிசாட் செயற்கைக்கோளை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. ராணுவ உளவு பயன்பாட்டுக்கான செயற்கைக்கோளே இந்த எமிசாட். இதன் எடை 436 கிலோ. இது உள்நாட்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்.

இதேபோல் அமெரிக்கா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் 28 செயற்கைக்கோள்களையும், பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் சுமந்து செல்லவுள்ளது. 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படவுள்ளன.

முதலில் 753 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் எமிசாட்டை, பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் செலுத்திய பிறகு, இதர செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் மற்றும் 485 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தும்.

இதற்காக ராக்கெட்டின் எஞ்சின்கள் 4 முறை ரீ ஸ்டார்ட் எனப்படும் மறுதொடக்க செயல்பாட்டிற்கு உள்ளாக்கப்படவுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. உலகிலேயே முதல்முறையாக இந்த முயற்சியை மேற்கொள்ள இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
Loading...
இதனிடையே, ராக்கெட் ஏவும் நிகழ்வை பொதுமக்கள் நேரிடையாக பார்த்து ரசிப்பதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளம் அருகே நவீன வசதிகளுடன் அரங்கம் ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது.

இந்த அரங்கத்தில் இருந்து சுமார் 5,000 பேர் ஒரே நேரத்தில் ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்க்கலாம். இந்த அரங்கம் ஏவுதளத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.எனினும், ராக்கெட் ஏவுதளத்தை முழுமையாகக் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ராக்கெட் ஏவுதல் முடிந்தவுடன் அங்குள்ள விண்வெளி அருங்காட்சியகத்தையும் பார்வையிட முடியும் என இஸ்ரோ கூறியுள்ளது. இதற்கு இஸ்ரோ இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Also see... வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளருக்கு அரத்தி எடுத்து அசத்திய மக்கள் 
First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...