முகப்பு /செய்தி /இந்தியா / மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டண சலுகை.. மத்திய அரசுக்கு பரிந்துரை..!

மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டண சலுகை.. மத்திய அரசுக்கு பரிந்துரை..!

மூத்த குடிமக்களுக்கான சலுகை

மூத்த குடிமக்களுக்கான சலுகை

கொரோனா காலத்தில் ரயிலில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India

கொரோனாவுக்கு முன்பு வரை குளிர்சாதன வசதியுள்ள முதல் மற்றும் இரண்டாம் தர பெட்டிகள் தவிர்த்து மற்ற அனைத்து பெட்டிகளிலும் மூத்த குடிமக்களுக்குக் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டன.  அதாவது 60 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு இந்த பெட்டிகளில் 40 சதவீதமும், 58 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணம் தள்ளுபடி வழங்கப்பட்டது.

கொரோனாவை காரணம் காட்டி மார்ச் 2020ல் அந்த சலுகைகளை ரயில்வே நிறுத்தி இருந்தது. இதனைத் திரும்ப அளிக்க ராதாமோகன்சிங் தலைமையிலான நிலைக்குழு இரண்டாவது முறையாக ரயில்வேக்கு அறிவுறுத்தியுள்ளது.

Also Read : "அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்..!

கொரோனாவுக்கு முன்பு அதாவது 2019-20 இல் ரயில்வேயில் பயணிகள் டிக்கெட்டில் மட்டும் 59 ஆயிரத்து 837 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக ரயில்வேயில் பெரிய இழப்பு சந்தித்தால், மானியத்தை ரயில்வே நிறுத்தியதாக ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Indian Railways, Parliament, Train