‘நமது பிரதமர் போன்ற தலைவர்களால் பெருமை’ - பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்!

‘நமது பிரதமர் போன்ற தலைவர்களால் பெருமை’ - பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்!

பிரதமர் மோடியை பாராட்டி பேசிய குலாம் நபி ஆசாத்!

சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் குலாம் நபி ஆசாத்தின் பிரியாவிடை தொடர்பான உரையின் போது பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத்தின் பிரிவால் பேச்சில் தடுமாற்றமடைந்து கண்ணீர் சிந்தியது நினைவிருக்கலாம்.

  • Share this:
குலாம் நபி ஆசாத் பிரதமர் மோடியை போற்றிப் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான குலாம் நபி ஆசாத் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவராக இருந்து சமீபத்தில் பணி நிறைவு பெற்று சொந்த ஊரான காஷ்மீருக்கே திரும்பியிருக்கிறார். ஆனால் அவருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தலைமை அளிக்கவில்லை என்று கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நேற்று காஷ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியை பாராட்டி பேசிய குலாம் நபி ஆசாத்!


நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன் பிறகு இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்டில் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கடிதம் அனுப்பினர். இது அரசியல் ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் பின்னர் மூத்த தலைவர்களை காங்கிரஸ் தலைமை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஜம்முவில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் 23 அதிருப்தி தலைவர்களும் ஒன்றிணைந்து பங்கேற்றனர். இதில் பேசிய கபில் சிபல் காங்கிரஸ் கட்சி உண்மையில் வலுவிழந்து வருவதை காண்கிறோம், அதற்காகத் தான் இங்கே கூடியுள்ளோம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடையே பேசுகையில், பல தலைவர்களைப் பற்றி எனக்கு நிறைய விஷயங்கள் பிடிக்கும். நான் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன், அதில் பெருமைப்படுகிறேன்.. தேநீர் விற்கும் நம் பிரதமரைப் போன்ற தலைவர்களும் கிராமங்களிலிருந்து வருகிறார்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் அரசியல் ரீதியில் போட்டியாளர்களாக இருக்கலாம், ஆனால் அவர் தனது உண்மையான பின்னணியை மறைக்கவில்லை என்பதை நான் பாராட்டுகிறேன்.

நான் உலகம் முழுவதும் பயணம் செய்து 5 நட்சத்திர ஹோட்டல்களில், 7 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருக்கிறேன் ... ஆனால் எனது கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் நான் அமரும்போது ... ஒரு நறுமணம் இருக்கிறது, அது சிறப்பு வாய்ந்தது” என பேசினார்.

சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் குலாம் நபி ஆசாத்தின் பிரியாவிடை தொடர்பான உரையின் போது பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத்தின் பிரிவால் பேச்சில் தடுமாற்றமடைந்து கண்ணீர் சிந்தியது நினைவிருக்கலாம். நான் உங்களை ஓய்வு பெற விடமாட்டேன், உங்களுடைய ஆலோசனைகளை கேட்டுப் பெறுவேன். உங்களுக்காக எனது கதவு எப்போதும் திறந்திருக்கும் என பேசினார்.
Published by:Arun
First published: