குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு... அசாமில் போராட்டம்...!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு... அசாமில் போராட்டம்...!
அசாமில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்
  • News18
  • Last Updated: November 22, 2019, 4:11 PM IST
  • Share this:
குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அசாம் மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அசாம் மாநிலத்தின் கவுஹாத்தியில், பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களில் இஸ்லாமியர் நீங்கலாக அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.


கிரிஷக் முக்தி சங்கிராம் சமிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Also see...
First published: November 22, 2019, 4:11 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading