Home /News /national /

விவசாயப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க நினைத்தால் பயிர்களை எரித்து விடுவோம்: ராகேஷ் திகைத் ஆவேசம்

விவசாயப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க நினைத்தால் பயிர்களை எரித்து விடுவோம்: ராகேஷ் திகைத் ஆவேசம்

ராகேஷ் சிங் திகைத்.

ராகேஷ் சிங் திகைத்.

போராட்டம் 2 மாதங்களில் முடியும் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். நாங்கள் அறுவடையும் செய்வோம் போராட்டமும் நடத்துவோம்

    விவசாயப் போராட்டங்கள் ஓய்ந்து விட்டதாகக் கருதாதீர்கள், தேவைப்பட்டால் தேர்தல் களம் காணும் மேற்கு வங்கத்திற்கு எங்கள் டிராக்டர்களை கொண்டு செல்வோம் என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு எச்சரித்துள்ளது.

    மேலும் டெல்லி எல்லையில் பெரிய அளவில் விவசாயிகளைக் குவிக்கவும் விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. டெல்லி எல்லைகளில் சம்யுக்த் கிசான்மோர்ச்சா அமைப்பு பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

    ராகேஷ் திகைத் கூறும்போது, கொல்கத்தாவுக்கும் போராட்டத்தைக் கொண்டு செல்வோம் என்று எச்சரித்தார்.

    அவர் கூறும்போது, “பயிர் விலைகள் உயர்த்தப்படவில்லை, ஆனால் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் ஏற்றுகின்றனர். இப்படியே மத்திய அரசு சிதிலப்பாதையில் சென்று கொண்டிருந்தால் நாங்கள் எங்கள் டிராக்டர்களை தேர்தல் களமான மேற்கு வங்கத்துக்கும் கொண்டு செல்வோம்.

    அங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் மீண்டும் பயிர்த்தொழிலுக்குச் செல்வார்கள் என்ற எந்த ஒரு தவறான கண்ணோட்டத்தையும் மத்திய அரசு கொள்ள வேண்டாம். அவர்கள் எங்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் முனைப்புக் காட்டினால் நாங்கள் பயிர்களை எரித்து விடுவோம்.

    போராட்டம் 2 மாதங்களில் முடியும் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். நாங்கள் அறுவடையும் செய்வோம் போராட்டமும் நடத்துவோம்.” என்றார் திகைத்.

    இதற்கிடையே மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

    போராட்டம் கடந்த நவம்பர் இறுதியில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்விக்கும் விவசாயப் போராட்டத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

    போராட்ட விவசாயிகளும் 3 மாத கால போராட்டங்களை அடையாளப் படுத்தும் விதமாக டெல்லி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க விவசாயிகளைத் திரட்டி வருகின்றனர்.

    போராட்டங்களை டெல்லியைத் தாண்டியும் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளார்கள். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் குறித்து எழுந்த இந்தப் போராட்டம் தவிர பலதரப்புகளிலும் இந்தச் சட்டங்கள் விமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Farm laws, Farmers Protest

    அடுத்த செய்தி