ஹோம் /நியூஸ் /இந்தியா /

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பாலியல் புகார் - பி.டி.உஷா தலைமையில் அவசர ஆலோசனை..

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பாலியல் புகார் - பி.டி.உஷா தலைமையில் அவசர ஆலோசனை..

மல்யுத்த வீரர்கள் போராட்டம்

மல்யுத்த வீரர்கள் போராட்டம்

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மேல் வீரர்கள் புகார் கடிதம் அளித்த நிலையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மல்யுத்த கூட்டமைப்பில் எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரான பி.டி.உஷாவுக்கு மல்யுத்த வீரர்கள் கடிதம் எழுதினர். அதனைத் தொடர்ந்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு, இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் அளித்ததாக, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர், பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன.

மல்யுத்த கூட்டமைப்பின் தலைமையை மாற்றக்கோரி மூத்த மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர், இந்த சூழலில் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த குழுவை அமைக்க வேண்டும் என்று 4 அம்ச கோரிக்கை விடுத்து மூத்த மல்யுத்த வீரர்களான விஜேந்தர் சிங், வினேஷ் போகத் உள்ளிட்டோர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதத்தை எழுதியுள்ளனர்.

அதில் விசாரணைக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பதவி விலக வேண்டும் என்றும், அந்த கூட்டமைப்பின் தலைவர் பதவியையே கலைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். கடைசியாக வீரர்களுடன் ஆலோசித்து புதிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் மல்யுத்த வீரர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் இது குறித்து அவசர ஆலோசனை நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Protest, Sexual harassment, Wrestlers