ஆடுகளுடன் மேற்குவங்க ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய நபரால் பரபரப்பு!

ஆடுகளுடன் மேற்குவங்க ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்

போராட்டம் நடந்த நேற்றைய தினம் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரின் பிறந்த நாளாகும்.

  • Share this:
8 கட்டங்களாக நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக vs திரிணாமுல் காங்கிரஸ் மோதல் என உச்சகட்ட பரபரப்பை எட்டியது, பின்னர் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் மம்தா பானர்ஜியின் தலைமையில் புதிய ஆட்சி அமைத்த நிலையில் மீண்டும் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான பழைய மோதல் தொடங்கியுள்ளது.

மேற்குவங்க ஆளுநர் மாளிகையின் வடக்கு வாசல் முன்பு நேற்று ஆட்டு மந்தையுடன் வந்த நபர் ஒருவர் ஆளுநரை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆடுகளுடன் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் போராட்டம் நடந்த நேற்றைய தினம் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரின் பிறந்த நாளாகும்.

இதனிடையே ஆடுகளுடன் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற போராட்டம் குறித்து மேற்குவங்க டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ள ஆளுநர் ஜக்தீப் தன்கர் இன்று மாலை 5 மணிக்குள் இது குறித்து தனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆளுநர் அனுப்பியுள்ள கடிதத்தில், “ஆளுநர் மாளிகை முன்பு அத்தனை போலீசார் இருந்தும் 2 மணி நேரமாக அந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இது போன்ற சமூக விரோத சக்திகளின் செயலை போலீசார் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பத்ரிகையாளர்கள் அந்த நபரின் செயலை படம்பிடித்துக் கொண்டிருக்கும் போது எதுவுமே செய்யாமல் போலீசார் பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்துள்ளனர்.144 தடை உத்தரவு இருக்கும் பகுதியில் இது போன்று போராட்டம் நடத்த எப்படி அனுமதிக்கப்படுகிறது என ஆளுநர் தனது கடிதத்தில் கேள்விகள் எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என 4 முக்கிய பிரமுகர்களை ஆளுநரின் ஒப்புதலை பெற்று சிபிஐ கைது செய்தது. இதனை கண்டித்து சிபிஐ அலுவலகத்துகே சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி மணிக்கணக்கில் தர்ணாவில் ஈடுபட்டார்.

Read More:  ஒற்றை ட்வீட்டால் ஏற்பட்ட சங்கடம்: அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தால் கொந்தளித்த சிங்கப்பூர் அரசு!

அந்த அலுவலக வளாகமே போர்கோலமாக காட்சியளித்தது. பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டதையடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும் சிபிஐ நீதிமன்றத்தின் முடிவுக்கு கொல்கத்தா நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதன் காரணமாக 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read More:  ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ரஷ்யாவிற்கு சுற்றுலா செல்லலாம்: அட்டகாசமான தடுப்பூசி சுற்றுலா திட்டம்!

கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த அமைச்சர் சுபத்ரா முகர்ஜி, பிர்ஹத் ஹக்கீம், எம்.எல்.ஏ மதன் மித்ரா மற்றும் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் உடல்நிலை சரியில்லை என சிறைத்துறையினரிடம் தெரிவித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Published by:Arun
First published: