கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தொடரும்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி

நாங்கள், அமைதியான முறையில் காந்திய வழியில் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். எங்களுக்கு ஆதரவாக தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தொடரும்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி
நாராயணசாமி
  • News18
  • Last Updated: February 14, 2019, 10:18 AM IST
  • Share this:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அளித்த கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் நாராயணசாமிக்கும் கடந்த சில வருடங்களாகவே யாருக்கு அதிகாரம் என்பதில் போட்டி நிலவிவருகிறது. இந்தநிலையில், அதிகாரப் போட்டியின் உச்சமாக, நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கருப்புச் சட்டை அணிந்து நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாராயணசாமிஅவருடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் அரசே போராட்டத்தில் இறங்கியதையடுத்து, சென்னை மற்றும் நெய்வேலியிலிருந்து மத்திய பாதுகாப்பு படையினர் ஆளுநர் மாளிகையைச் சுற்றி குவிக்கப்பட்டனர்.

அதனால், புதுச்சேரியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து நம்முடைய அரசியல் பிரிவு ஆசிரியர் செந்திலுக்கு நாராயணசாமி பிரத்யேகப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், ‘நாங்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடவில்லை. எங்களால் ஆளுநருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. நாங்கள், அமைதியான முறையில் காந்திய வழியில் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். எங்களுக்கு ஆதரவாக
தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆளுநர் கிரண்பேடி, வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போடுகிறார். மக்கள் நலன் திட்டங்கள் குறித்த கோப்புகளை அனுப்பினால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிகிறார். அவர், சர்வாதிகரி போல செயல்படுகிறார். இலவச அரிசித் திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அரசு ஊழியர்கள், கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்புகிறார்.

கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டிய நிதி ஒப்புதலை தடுத்து நிறுத்தியுள்ளார். இலவசத் திட்டங்கள் குறித்த கோப்புகளை நிறுத்துகிறார். அதிகாரம் இல்லாத அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்துகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார்.

39 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டிய விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 7-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். அந்த கோப்புகளுக்கு இதுவரையில் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த கடிதத்துக்கு இதுவரையில் பதிலும் அளிக்கவில்லை. அந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும்வரையில் போராட்டம் தொடரும்’ என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை அருகிலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று, இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்துள்ளது. இந்தநிலையில், ஆளுநர் கிரண்பேடி இன்று காலையில் திடீரென்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also see:

 

 
First published: February 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்