நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்கும் நிலையில், குடியரசுத் தலைவராக இருந்து வெளியேறும் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக நாட்டு மக்களுக்கு நேற்று தனது கடைசி உரையை ஆற்றினார். இந்த உரையில் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, "நாடு விடுதலை அடைந்த உடன் அன்றைய இளைஞர்களிடம் நாட்டை சிறப்பாக கட்டமைக்க வேண்டும் என்ற கனவும் ஆற்றாலும் இருந்தது. நானும் அதே கனவுகளை சுமந்த இளைஞராக நாட்டின் கட்டுமானத்தில் நிறைவான பங்களிப்பு மேற்கொள்ள வேண்டும் என செயலாற்றத் தொடங்கினேன்.
குடிசை வீட்டில் பிறந்த ஒரு சிறுவனால் நாட்டின் மிக உரிய பொறுப்புக்கு வர முடிந்துள்ளது. இந்த ஜனநாயகம் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆற்றல் இது தான். எளிய கிராமத்தில் பிறந்த ஒரு நபர் உங்களிடம் இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதை சாத்தியப்படுத்திய இந்திய ஜனநாயகத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவை மூன்றும் ஒருங்கிணைந்து இயங்க வேண்டும்.இவற்றில் ஏதும் ஒன்றை நாம் விட்டுத்தந்தால் ஜனநாயகம் அர்த்தமற்றதாகவிடும்.
இதையும் படிங்க: இந்திய பள்ளி மாணவனுக்கு அமெரிக்காவில் கிடைத்த வேலை.. வயதால் நழுவிய வாய்ப்பு!
எதிர்கால சந்ததியினர் கால நிலை மாற்ற பிரச்னைக்கு முக்கிய கவனம் தந்து கையால வேண்டும். நமது சுற்றுச்சூழல், நிலம், காற்று, நீர் ஆகியவற்றை நமது அடுத்து தலைமுறைக்காக பாதுகாத்து வைக்க வேண்டும். இயற்கை அன்னை பெரும் கோபத்தில் உள்ளார். கால நிலை மாற்றம் என்பது நமது பூமியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். எனவே, நமது அன்றாட வாழ்வில் தினசரி செயல்பாட்டில் மரங்கள், நதிகள், கடல், மலைகள் ஆகியவற்றை அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும்.
நாட்டின் முதல் குடிமகனாக நாட்டு மக்களுக்கு நான் ஒரு செய்தி கூற வேண்டும் என்றால் அது நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதே. கல்வி, சுகாதாரம் ஆகியவை மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களை மேம்படுத்தும் அதை நோக்கிய பயணத்தில் இந்தியா தன்னை முறையாக தகவமைத்துக்கொள்ளும் என நான் நிச்சயம் நம்புகிறேன்" எனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Environment, President, Ramnath Kovinth