Home /News /national /

குறுகிய எண்ணம் வேண்டாம்: இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு இந்தியா பதிலடி

குறுகிய எண்ணம் வேண்டாம்: இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு இந்தியா பதிலடி

அரிந்தம் பக்‌ஷி

அரிந்தம் பக்‌ஷி

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலகம் தெரிவித்துள்ள ‘தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணங்கள் கொண்ட கருத்துகளை’ இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது

    நபிக்கு எதிரான கருத்துகளுக்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)  இந்தியாவை கடுமையாக சாடியதோடு, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐநாவிடம் கேட்டது. இந்நிலையில் ஆளும் பாஜக இருவரை நீக்கி நடவடிக்கை எடுத்த பின்பும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கருத்து தெரிவித்து வருவதற்கு பதிலடியாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலகம் தெரிவித்துள்ள ‘தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணங்கள் கொண்ட கருத்துகளை’ இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது என்று பதிலடி கொடுத்துள்ளது.

    OIC இன் தலைமைச் செயலகத்தின் சமீபத்திய அறிக்கை தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமைச் செயலகத்தில் இருந்து இந்தியா குறித்த அறிக்கையைப் பார்த்தோம். OIC செயலகத்தின் தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை திட்டவட்டமாக இந்தியா நிராகரிக்கிறது.” என்றார்.

    அறிக்கையில் ஏற்கெனவே இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கிறது என்றும் எந்த ஒரு மதத்தையும் இழிவு செய்வது முறையல்ல என்றும் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் அரிந்தம் பாக்சி மேலும் கூறும்போது, “"ஒரு மதத்தின் ஆளுமையை இழிவுபடுத்தும் அவதூறான ட்வீட்கள் மற்றும் கருத்துக்கள் குறிப்பிட்ட நபர்களால் தெரிவிக்கப்பட்டவையே தவிர அவை எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. சம்பந்தப்பட்ட அமைப்புகளால் இந்த நபர்களுக்கு எதிராக ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

    ஆகவே “"OIC செயலகம் மீண்டும் தவறாக வழிநடத்தும் கருத்துகளைத் தெரிவு செய்திருப்பது வருந்தத்தக்கது. இது சிலபலரின் நலன்களின் தூண்டுதலால் மதரீதியாக பிளவுபடுத்தும் திட்டத்தை மட்டுமே அம்பலப்படுத்துகிறது

    "OIC செயலகம் அதன் வகுப்புவாத அணுகுமுறையைப் பின்பற்றுவதை நிறுத்தவும், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கும் உரிய மரியாதையைக் காட்டுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்." என்று இந்தியா தரப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

    நடந்துகொண்டிருக்கும் ஞானவாபி விவகாரம் பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில், இஸ்லாமிய மத புத்தகங்களை மக்கள் கேலி செய்யலாம் என்று நுபுர் ஷர்மா கூறினார். முஸ்லீம்கள் இந்து மத நம்பிக்கையை கேலி செய்வதாகவும், மசூதி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் 'சிவ்லிங்கத்தை நீரூற்று' என்றும் முஸ்லிம்கள் கூறுவதாக நுபுர் ஷர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

    முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரின் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hindu Muslim issues, Islam

    அடுத்த செய்தி