ஹோம் /நியூஸ் /இந்தியா /

சுப்ரமணியம் சுவாமி வீட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

சுப்ரமணியம் சுவாமி வீட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

சுப்ரமணியன் சுவாமி

சுப்ரமணியன் சுவாமி

சுப்ரமணியன் சுவாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரின் தனியார் குடியிருப்பில் உரிய பாதுகாப்பு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி மாநிலங்களவை உறுப்பினராக 2016ஆம் ஆண்டு அக்கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் இந்தாண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் அவருக்கு அரசு பங்களா ஒன்று டெல்லியில் ஒதுக்கப்பட்டிருந்தது. அவரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதமே நிறைவடைந்ததால், அரசு பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

  ஆனால், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால் அதே அரசு பங்களாவை ஒதுக்கித் தர வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுப்ரணியம் சுவாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு பங்களாவை ஒதுக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. அதேவேளை, சுவாமிக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரித்துள்ளது.

  ஆனால், மத்திய அரசு தனது உறுதியளித்தபடி, பாதுகாப்பு வழங்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, மனுதாரரின் புகாருக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், மனுதாரர் சுப்ரமணியன் சுவாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரின் தனியார் குடியிருப்பில் உரிய பாதுகாப்பு வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

  இதையும் படிங்க: நாடு முழுவதும் குப்பை கழிவுகளை நீக்கியதன் மூலம் அரசுக்கு ரூ.342.63 கோடி வருவாய் - மத்திய அமைச்சர் தகவல்!

  மத்திய அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட சுப்ரமணியன் சுவாமி தரப்பு இன்று அரசு பங்களாவை காலி செய்து ஒப்படைப்பதாக உறுதி அளித்தது. இதையடுத்து மனுவை நீதிமன்றம் முடித்து வைத்தது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Delhi, Delhi High Court, Subramanian Swamy, Subramaniyan swamy