ஹோம் /நியூஸ் /இந்தியா /

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தீவிரமான பிரச்னை : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பது தீவிரமான பிரச்னை : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

ஆட்சியில் நீடிக்க மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற இந்த நெறிமுறையற்ற நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் இலவசங்களை தருவதாக வெளியிடும் வாக்குறுதிகள், தீவிரமான பிரச்சினை, அதை தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் கட்சியினர் இலவசங்களை தருவதாக வாக்குறுதிகள் அறிவிப்பது தற்போது பெரும்பாலான மாநிலங்களில் சகஜமாகி வருகிறது. மக்கள் வரிப்பணத்தில் இலவசங்கள் தருவதாக அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  அவரது மனுவில், தேர்தலை மையமாக வைத்து இலவசங்களை வழங்குவதன் மூலம் வாக்காளர்களை கவர்ந்து வரும் அரசியல் கட்சிகளின் சமீபத்திய போக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மட்டுமல்ல, அரசியலமைப்பின் ஜீவனையும் பாதிக்கிறது. ஜனநாயகக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் காப்பாற்றும் வகையில், ஆட்சியில் நீடிக்க மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற இந்த நெறிமுறையற்ற நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

  Also read:   இன்று நீங்கள் புகைப்பிடித்தால் நாளை உங்கள் பேத்திகளுக்கு உடல் பருமன் ஏற்படும் - புதுமையான ஆய்வு!!

  தேர்தல் நேரத்தில் இலவசங்களை தருவதாக அரசியல் கட்சிகள் கூறுவது அரசியலமைப்புக்கு விரோதமானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “இது மிகவும் தீவிரமான பிரச்னை. சட்டரீதியாக இதனை எப்படி தடுப்பது என்பதை அறிய விரும்புகிறேன். எதிர்வரும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலேயே இதனை அமல்படுத்த முடியுமா என்பதையும் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். ஆனால் அடுத்த தேர்தலில் இந்த நடைமுறை நீடிக்கக் கூடாது. இது உண்மையிலேயே தீவிரமான பிரச்னை. இலவசங்களை வழங்குவதற்கான பட்ஜெட், பொதுவான பட்ஜெட்டைக் காட்டிலும் கூடுதலாக செல்கிறது.

  Also read:    வக்கிர புத்தி படைத்த தந்தையால் மைனர் சிறுமிக்கு சேர்ந்த அவலம்!!

  எனவே இலவசங்களை தருவதாக கட்சியினர் வாக்குறுதிகள் வழங்காமல் இருப்பதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருக்கிறது. அடுத்த 4 வாரங்களில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

  Published by:Arun
  First published:

  Tags: Political party, Supreme court