நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திலீப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை

நடிகர் திலீப்

நடிகர் திலீப் வழக்கின் முக்கிய ஆதாரமான வீடியோவை போலீசார் தமக்கு வழங்கவில்லை எனக் கூறி விசாரணையை தள்ளி வைக்க வலியுறுத்தி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திலீப்புக்கு எதிரான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு                 85 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நடிகையைக் கடத்தி தாக்குதலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் 300 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, செல்போன் உரையாடல் உள்ளிட்ட 400 ஆவணங்களை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு 14-ம் தேதி எர்ணாக்குளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், நடிகர் திலீப் வழக்கின் முக்கிய ஆதாரமான வீடியோவை போலீசார் தமக்கு வழங்கவில்லை எனக் கூறி விசாரணையை தள்ளி வைக்க வலியுறுத்தி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நடிகர் திலீப்பின் இந்த மனுவிற்கு காவல்துறையினர் சார்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் மனுவில்
வீடியோவை திலீப்பிடம் கொடுத்தால் நடிகைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விசாரணை திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் விசாரணையை இனியும் தள்ளி வைக்க முடியாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து நடிகர் தீலிப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தெடாரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 3-வது வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Also Watch:
Published by:Vijay R
First published: