தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற நேற்று மாலை 4 மணி அளவில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்த மாணவியை பேராசிரியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது வீட்டிற்கு புத்தகங்கள் தருவதாகக் கூறி அழைத்துள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணிடம் மது அருந்துமாறு வற்புறுத்தி பின்னர் தனிமையில் இருக்கும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது சக மாணவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.
அந்த மாணவிக்கு தாய்லாந்து நாட்டின் மொழி மட்டும் தான் தெரியும் எனக் கூறப்படுகிறது. பாலியல் புகார் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் ஹைதராபாத் காவல்துறையிடம் பேராசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். மேலும், பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக நுழைவு வாயிலில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: பேஸ்புக்கில் நட்பு... டெல்லி இளம்பெண்ணின் வலையில் வீழ்ந்து ரூ.39 லட்சம் பறிகொடுத்த அமெரிக்க பேராசிரியர்!
இந்நிலையில், புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பேராசிரியர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டிசிபி கே ஷில்பவள்ளி தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகார் குறித்து நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி மொழி கூறி பல்கலைக்கழக நிர்வாகம் போராட்டம் நடத்திய மாணவர்களை சமாதானம் செய்து வருகிறது. வெளிநாட்டு மாணவியிடம் பேராசிரியர் ஒருவரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hyderabad, Sexual abuse, Sexual harassment