ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

Bonus for Railway Employees: 78 நாள் ஊதியத்திற்கு சமமான போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்திய ரயில்வேத் துறையில் அரசிதழ் பதிவு பெறாத (கெசடட் அல்லாத)  11.58 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு இணையான ஊதியம் போனஸ் வழங்கும் திட்டத்துக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

  கெசடட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித் திறனுடன் கூடிய போனஸ் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.  இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து கெசடட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கும் (ஆர்பிஎஃப் / ஆர்பிஎஸ்எஃப் தவிர்த்து) பொருந்தும்.

  தகுதி வாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியோடு இணைந்த போனஸ் தொகை ஒவ்வொரு ஆண்டும் தசரா/பூஜை விடுமுறை தினங்களுக்கு முன்பாக வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும், அமைச்சரவை முடிவின் படி விடுமுறை தினங்களுக்கு முன்பாக போனஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

  இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் அனுராக் தாக்கூர்," 2021-22 நிதியாண்டின் 78 நாள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கப்படும். அதிகபட்ச தொகை ரூ.17951 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் வழங்குவதற்கு ரூ.1832 கோடி செலவாகும்" என்று தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க:  டாடா நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

  Published by:Salanraj R
  First published:

  Tags: Diwali bonus, Indian Railways, Railway Jobs