ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியின் உற்பத்தி இந்தியாவில் தொடக்கம்

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

 • Last Updated :
 • Share this:
  ரஷ்யாவின் "ஸ்புட்னிக் வி" தடுப்பூசியின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

  இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு, மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, ரஷ்யாவில் இருந்து இரண்டு கட்டங்களாக தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது.

  மேலும், இந்தியாவிலேயே ஸ்புட்னிக் தடுப்பூசிகளை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பு தொடங்கியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் முதற்கட்ட தடுப்பூசிகள், தரப் பரிசோதனைக்காக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தியாவிலேயே ஆண்டுக்கு 10 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: