இந்தியா- பாகிஸ்தான் இடையே 1971 ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் 50ம் ஆண்டு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் பெயரை பாஜக அரசு தவிர்த்து வருவதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்னர், மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு போதிய நிதியுதவியும் அங்கீகாரமும் அளிக்காமல் இருந்து வந்தது.இது போர் என்னும் சூழலுக்கு இட்டு சென்றது. 1971 டிசம்பர் 3ஆம் நாள் களத்தில் இறங்கியது இந்தியாவும் பாகிஸ்தானும். இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ராணுவம், டிசம்பர் 16ம் தேதி 93 ஆயிரம் வீரர்களுடன் நிபந்தனையின்றி சரணடைந்தது.
போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50ம் ஆண்டு விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. போர் நடைபெற்ற காலக்கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி குறித்து அரசு விழாக்களில் குறிப்பிடுவதை மத்திய பாஜக அரசு தவிர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், நமது முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தி, பெண் விரோத பாஜக அரசின் விஜய் திவாஸ் கொண்டாட்டங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இந்தியாவை இந்திரா காந்தி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று வங்கதேசத்தை விடுவித்த நாளின் 50வது ஆண்டு நினைவு நாளில் இது நடைபெறுகிறது.. நரேந்திர மோடிஜி, பெண்கள் உங்களின் அற்பத்தனத்தை நம்ப மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: புகைப் பிடித்ததற்கு அபராதம்: பழிவாங்க ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்
இதேபோல், ராகுல் காந்தி, இந்திரா காந்தி நாட்டிற்காக 32 தோட்டாக்களை உடலில் தாங்கினார். ஆனால் 1971 ஆம் ஆண்டு போர் ஆண்டு நினைவு தினத்திற்காக டெல்லியில் நடந்த அரசாங்க நிகழ்வில் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொல்கத்தா துர்கா பூஜைக்கு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.