PRIYANKA GANDHI VOICES SUPPORT FOR PROTESTING FARMERS MUT
விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்வது பாவ காரியம்: பிரியங்கா காந்தி வேதனை
கோப்புப் படம்.
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையீடு வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய போது பிரியங்கா காந்தியை போலீஸார் தடுப்புக்காவலில் வைத்தனர்.
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையீடு வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்திய போது பிரியங்கா காந்தியை போலீஸார் தடுப்புக்காவலில் வைத்தனர்.
பிற்பாடு பிரியாங்கா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்த போது, “இந்த அரசை எதிர்ப்பவர்கள், மறுப்பவர்கள், பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கவே இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தோம்.
சில வேளைகளில் பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை வலுவிழந்து விட்டது என்றும் எதிர்க்கட்சியாக இருக்க தகுதி இல்லை என்றும் பலவீனமானவர்கள் என்று கூறுகின்றனர், ஆனால் அதே வேளையில் லட்சக் கணக்கான விவசாயிகளை நாங்கள்தான் திரட்டிக் கொண்டு வந்து டெல்லியில் நிறுத்தியுள்ளோம் என்று எங்களை அவ்வளவு பெரிய சக்தியாகப் பேசுகின்றனர். நாங்கள் யார் என்பதை அவர்கள் முதலில் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
விவசாயிகளை மத்திய அரசு தேசவிரோதிகள் என்று அழைப்பதன் மூலம் மத்திய அரசு பாவ காரியம் செய்கிறது. ” என்றார்.
இவருடன் பேரணியை தலைமை ஏற்று நடத்திய ராகுல் காந்தி, “விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறும் வரை அவர்கள் நிச்சயம் வீடு திரும்ப மாட்டார்கள் என்பதை பிரதமருக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆதரவாக உள்ளது” என்றார்.