• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர் வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனையில் பங்கேற்கும் பிரியங்கா காந்தி!

லக்கிம்பூர் வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனையில் பங்கேற்கும் பிரியங்கா காந்தி!

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

பிரியங்காவின் வருகையையொட்டி அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். லக்னோ-சீதாபூர்-லக்கிம்பூர் நெடுஞ்சாலையில் பலத்த தடுப்பு மற்றும் போலீஸ் சோதனைகள் காணப்படுகின்றன. 

  • Share this:
    லக்கிம்பூர் வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோவில் இருந்து லக்கிம்பூர் கேர் பகுதிக்கு புறப்பட்டு சென்றார். பிரியங்காவின் வருகையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி  கடந்த அக்டோபர் 4ம் தேதி சென்றபோது அவரை போலீசார் தடுத்து காவலில் வைத்தனர்.  இதேபோல், ராகுல்காந்தியையும் அப்பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை .

    இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ராகுல், பிரியங்கா உள்ளிட்ட  5 பேர் மட்டும் லக்கிம்பூர் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 6ம் தேதி இரவு 10 மணியளவில் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ராகுல், பிரியங்கா இருவரும் ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி பிரார்த்தனை  இன்று நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரியங்கா காந்தி லக்னோவில் இருந்து லக்கிம்பூர் புறப்பட்டு சென்றார். பிரியங்காவின் வருகையையொட்டி அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சரின் மகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்


    லக்னோ-சீதாபூர்-லக்கிம்பூர் நெடுஞ்சாலையில் பலத்த தடுப்பு மற்றும் போலீஸ் சோதனைகள் காணப்படுகின்றன. பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: