• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விவசாயிகள் பலி: பிரியங்கா காந்தி, அகிலேஷை தடுத்த போலீசார்!

விவசாயிகள் பலி: பிரியங்கா காந்தி, அகிலேஷை தடுத்த போலீசார்!

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

போலீசார் தடுத்ததை தொடர்ந்து பிரியங்கா காந்தி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னை தடுத்து வாகத்தில் ஏற்றினால் கடத்தல் புகார் அளிக்கப்போவதாகவும் எச்சரித்தார்.

  • Share this:
    உத்தரப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விடாமல் பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி

    இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வன்முறையில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக இன்று அதிகாலையில் சம்பவ இடத்துக்கு புறப்பட்டு சென்றார். சிதாபூர் பகுதியில் பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த போலீசார், அவரை மேற்கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர்.

    அப்போது அவர்களுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, “ நீங்கள் கொன்றவர்களை விட நான் முக்கியமான நபர் அல்ல. நான் செல்லக் கூடாது என்பதற்கான சட்டப்பூர்வ வாரண்டை தாருங்கள். இல்லையென்றால் நாங்கள் இங்கு இருந்து நகர மாட்டேன். உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது.  என்னை காரில் ஏற்றினீர்கள் என்றால் உங்கள் மீது கடத்தல் புகார் அளிப்பேன்’ என்று காரசாரமாக பேசினார்.

    இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து 8 பேர் பலி:  மத்திய அமைச்சரின் மகன் காரணம்- விவசாயிகள் புகார்


    வீட்டு வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்ட அகிலேஷ் யாதவ்:

    இதேபோல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று  ஆறுதல் தெரிவிக்க சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். இதனை அறிந்த போலீசார், லக்கோவின் உள்ள அகிலேஷ் யாதவ்வின் வீட்டு முன்பு குவிந்தனர்.  லக்கிம்பூர் பகுதிக்கு செல்ல அகிலேஷ் வந்தபோது அவரை போலீசார் தடுத்தனர்.

    அகிலேஷ் யாதவ்


    இதையடுத்து தனது வீட்டின் முன்பே அகிலேஷ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் மீது பாஜக அரசு செய்யும் அளவுக்கு ஆங்கிலேயர்கள் கூட இதுபோன்ற கொடுமைகளை செய்யவில்லை. மாநில உள்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் பதவி விலக வேண்டும். உயிர் இழந்த விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி வழங்க வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிக்க: முறைகேடான நிதி முதலீடு- வெளியான பண்டோரா ஆவணம்: சச்சின் உள்ளிட்ட இந்தியர்களும் சிக்கினர்!


    மேலும், எந்த அரசியல் தலைவரும் அங்கு செல்வதை அரசு விரும்பவில்லை. அரசு எதனை மறைக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: