• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிதம்பரத்துக்கு துணை நின்று உண்மைக்காகப் போராடுவோம்! பிரியங்கா காந்தி ஆதரவு

சிதம்பரத்துக்கு துணை நின்று உண்மைக்காகப் போராடுவோம்! பிரியங்கா காந்தி ஆதரவு

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதனையடுத்து, சி.பி.ஐ அவரைக் கைது செய்ய முயற்சித்துவருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ப.சிதம்பரத்துக்கு துணை நின்று உண்மைக்காக அரசுக்கு எதிராக போராடுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இதற்காக நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதில் ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், அதற்கு ஈடாக லஞ்சம் தரப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதனையடுத்து, சி.பி.ஐ அவரைக் கைது செய்ய முயற்சித்துவருகிறது.

    ப.சிதம்பரம்


    நேற்று, மாலையிலிருந்து மூன்று முறை சிதம்பரத்தின் வீட்டுக்கு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். வீட்டில் சிதம்பரம் இல்லாதநிலையில், இரண்டு மணி நேரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அளித்துள்ளனர். சிதம்பரத்தின் மீது, பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ராஜ்யசபாவின் மிகவும் தகுதிவாய்ந்த, மதிப்புமிக்க ப.சிதம்பரம் பல தசாப்தங்களாக நாட்டுக்காக சிறந்த முறையில் சேவையாற்றியுள்ளார். உள்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.


    அவர், தயக்கமின்றி அதிகாரத்துக்கு எதிராக உண்மைகளைப் பேசிய இந்த அரசின் தோல்விகளை வெளிப்படுத்திவருகிறார். ஆனால், கோழைகளுக்கு உண்மைகள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், அவர் வேட்டையாடப்படுகிறார். நாங்கள் சிதம்பரத்துடன் இணைந்து நிற்போம். எந்த பின்விளைவுகள் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் உண்மைகாக போராடுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: