எஸ்.பி.ஜி ரத்து - பாதுகாப்பை மீறி பிரியங்கா காந்தி வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர்!

எஸ்.பி.ஜி ரத்து - பாதுகாப்பை மீறி பிரியங்கா காந்தி வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர்!
பிரியங்கா காந்தி
  • News18
  • Last Updated: December 2, 2019, 8:21 PM IST
  • Share this:
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தியின் வீட்டுக்கு பாதுகாப்பை மீறி அனுமதியில்லாமல் காரில் ஐந்து பேர் நுழைந்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. எஸ்.பி.ஜி பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்பு நவம்பர் 4-ம் தேதி திரும்பப் பெறப்பட்டது. தற்போது அவர்களுக்கு துணை ராணுவப் படையால் வழங்கப்படும் இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 26-ம் தேதி அனுமதியின்றி பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் ஐந்து பேர் காரில் நுழைந்துள்ளனர். அவர்கள், பிரியங்கா காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில், பிரியங்காவும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இருப்பினும், பாதுகாப்புகளை மீறி அவர்கள் எப்படி வீட்டுக்குள் நுழைந்தனர் என்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் இடையிலிருந்த குழப்பத்தினால் உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு படையிடம் பிரிங்கா காந்தி அலுவலகத்திலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Also see:

First published: December 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...