’மக்களுக்காக இல்லாமல் தொழிலதிபர்களுக்காக செயல்படும் பா.ஜ.க’- வயநாட்டில் பிரியங்கா காந்தி

'காங்கிரஸ் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். ஆனால், பாஜக செய்யாது. இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம்.'

Web Desk | news18
Updated: April 20, 2019, 1:53 PM IST
’மக்களுக்காக இல்லாமல் தொழிலதிபர்களுக்காக செயல்படும் பா.ஜ.க’- வயநாட்டில் பிரியங்கா காந்தி
(PTI photo)
Web Desk | news18
Updated: April 20, 2019, 1:53 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்திக்காக அவரது சகோதரி வயநாட்டில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தின் போது பிரியங்கா பேசுகையில், “பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகக் கூறியது. ஆனால், கேரள வெள்ளத்தின் போது நடந்தது என்ன?

எனது பாட்டி இந்திரா காந்தி பழங்குடியின மக்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். அந்த மரியாதையின் நிமித்தமே உங்களுக்கான திட்டங்கள் உங்கள் அடையாளங்களைக் குலைக்காதவாறு கொண்டு வரப்பட்டன. மக்களுக்காகத் தான் வறுமையில் உள்ளோருக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் நியாய் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இளைஞர்கள் தங்களுக்கான சுயதொழில் முயற்சிகளை எளிதாக மேற்கொள்ளலாம். ஏழை மக்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் இலவச கல்வி வழங்கப்படும். காங்கிரஸ் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். ஆனால், பாஜக செய்யாது. இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம்.

மேலும், காங்கிரஸ் மக்களை மேம்படுத்த நினைக்கும். ஆனால், பாஜக மக்களை மதிக்காமல் தொழிலதிபர்களுக்காக மட்டுமே திட்டங்களை வகுக்கும். இன்று உங்கள் முன்னிலையில் ஒரு சகோதரியாக நிற்கிறேன். நான் பிறந்த நாளிலிருந்து நான் அறிந்த ஒருவருக்காக இன்று உங்கள் முன் நிற்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக எதிரணியிடமிருந்து கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளார்” எனப் பேசினார்.

மேலும் பார்க்க: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர் நல வாரியம் - பிரதமர் மோடி வாக்குறுதி
First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...