என் அப்பாவுடன் எடுத்த கடைசி புகைப்படம் - ராஜீவ் காந்தி மறைந்த நாளை நினைவுகூர்ந்த பிரியங்கா காந்தி

வானம் எத்தனை கறுப்பாக இருந்தாலும் பிரச்னையில்லை. இதயத்தை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். அதனை அன்பு கொண்டு நிரப்புங்கள்.

என் அப்பாவுடன் எடுத்த கடைசி புகைப்படம் - ராஜீவ் காந்தி மறைந்த நாளை நினைவுகூர்ந்த பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
  • Share this:
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது தந்தை ராஜீவ் காந்தியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அவர் மறைந்த நாளை நினைவுகூர்ந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி கொல்லப்பட்டார். அவருடைய மறைவு நாளை காங்கிரஸ் கட்சியினர் இன்று அனுசரித்துவருகின்றனர். ராஜீவ் காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, ராஜீவ் காந்தியுடன் பிரியங்கா எடுத்த கடைசிப் புகைப்படத்தை பகிருந்து அவரது மறைவை நினைவு கூர்ந்துள்ளார்.

இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘உங்களிடம் அன்பாக இல்லாதவர்களிடமும் அன்பாக இருங்கள். வாழ்கை நியாயமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை எவ்வளவு நியாயமற்றதாக இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்தாலும் அதுகுறித்து பிரச்னையில்லை. வானம் எத்தனை கறுப்பாக இருந்தாலும் பிரச்னையில்லை. இதயத்தை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். அதனை அன்பு கொண்டு நிரப்புங்கள். அது எவ்வளவு சோகமானதாக இருந்தாலும் பிரச்னையில்லை. இதுதான் என்னுடைய அப்பாவின் வாழ்கையிலிருந்து கிடைத்த பரிசுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 

Also see:
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading