ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் - இமாச்சலில் பிரியங்கா காந்தி வாக்குறுதி

பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் - இமாச்சலில் பிரியங்கா காந்தி வாக்குறுதி

இமாச்சலில் பிரியங்கா காந்தி பரப்புரை

இமாச்சலில் பிரியங்கா காந்தி பரப்புரை

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Himachal Pradesh, India

  இமாச்சலில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்றுவவருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.

  இமாச்சலில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்றுவவருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே, அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி மீதான அதிருப்தியை வைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தேர்தல் பணிகளை மும்முரமாக தொடங்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள கங்கரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரியங்கா காந்தி பேசியதாவது, 'இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  இந்த வாக்குறுதி சாத்தியம் இல்லை என தற்போதைய முதலமைச்சர் கூறுகிறார். நாட்டின் சொத்துகளான பொதுத்துறை நிறுவனங்களை தனது கார்ப்ரேட் நண்பர்களுக்கு விற்க பாஜகவால் முடிகிறது. பெரு முதலாளிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ய பாஜக அரசால் முடிகிறது. ஆனால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தின் மக்களுக்கு வேலையை உருவாக்க முடியாது என பாஜக தெரிவிக்கிறது. இங்கே சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் உள்ளார். அவர் தலைமையிலான காங்கிரஸ் அரசு அம்மாநிலத்தில் 5 லட்சம் வேலைகளை மூன்று ஆண்டுகளில் வழங்கியுள்ளது.

  இதையும் படிங்க: பிரதமர் மோடி என்னை பாராட்டவில்லை, உண்மையைத்தான் சொன்னார் - அசோக் கெலாட் கருத்து

  அதேபோல், அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசும் 1.30 லட்சம் வேலைகளை உருவாக்கியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். அதேபோல், மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். இவ்வாறு இமாச்சல் மக்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதியை பிரியங்கா காந்தி வழங்கியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Congress, Himachal Pradesh, Priyanka gandhi