முலாயம் சிங் யாதவின் மேலும் ஒரு குடும்ப உறவினர், பிரியங்கா காந்தியின் தளபதியாக செயல்பட்ட மகளிரணி தலைவி ஆகியோரை கட்சியில் சேர்த்து ஒரே நாளில் அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி இருவருக்கும் அதிர்ச்சியளித்திருக்கிறது பாஜக.
உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே உச்சகட்ட அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அடுத்தடுத்து சிலர் விலகி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து ஆளும் பாஜகவுக்கு சரிவு ஏற்பட்டதாக கருதப்பட்டது.
ஆனால் பாஜகவில் அடுத்தடுத்து பல முக்கிய பிரமுகர்கள் இணைந்து வருவது சமாஜ்வாதி கட்சிக்கு சரிவை ஏற்படுத்துவது போல மாறியுள்ளது. குறிப்பாக முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் சகோதரர் பிரதீக் யாதவின் மனைவியுமான
அபர்னா யாதவ் நேற்று திடீரென பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தது குறித்து அபர்னா பேசுகையில், தான் மோடியால் ஈர்க்கப்பட்டதாகவும், தன்னைப் பொறுத்தவரையில் நாடு தான் உயர்ந்தது. நாட்டுக்கு சேவை செய்வதற்காக நான் வந்துள்ளேன் என்றார்.
Also read:
கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு கொடூர தாக்குதல் - வீடியோ
இதனிடையே முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தாவின் சகோதரரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பிரமோத் குப்தா இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அடுத்தடுத்த நாட்களில் குடும்ப உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளது அகிலேஷ் யாதவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

priyanka maurya
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணி துணைத் தலைவியான பிரியங்கா மெளர்யாவும் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பிரியங்கா காந்தியின் தளபதி போல செயல்பட்டு வந்தவர். மேலும் காங்கிரஸ் கட்சி மகளிர் மேம்பாட்டுக்காக கொண்டு வந்த 'Ladki Hoon, Lad Sakti Hoon' இயக்கத்தின் முகமாகவும் இருந்தவர் பிரியங்கா மெளர்யா. அந்த இயக்கத்தின் போஸ்டர்களில் கூட பிரியங்கா மெளர்யாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
Also read: கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பேட் நியூஸ்
பாஜகவில் இணைந்தது குறித்து பிரியங்கா மெளர்யா கூறுகையில், பணம் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற நிலை காங்கிரஸில் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன் கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் தரப்படுகிறது. இது தான் காங்கிர்ஸின் நிலை என்பதை பிரியங்கா காந்தி உணரும் விதமாக பாஜகவில் இணைந்துள்ளேன் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.