ராகுலுடன் இணைந்து பிரியங்கா காந்தி பேரணி! காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது.

news18
Updated: February 11, 2019, 4:49 PM IST
ராகுலுடன் இணைந்து பிரியங்கா காந்தி பேரணி! காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
ராகுல் காந்தி | பிரியங்கா காந்தி
news18
Updated: February 11, 2019, 4:49 PM IST
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியுடன் இணைந்து லக்னோ நகரின் வீதிகளில் பேரணியாகச் சென்றார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மிகப் பெரும் வரவேற்பு அளித்தனர்.

மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளநிலையில், நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில், வலிமையாக உள்ள பா.ஜ.கவை வெற்றிபெறுவதற்கான முயற்சிகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி


மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரஸ் முயற்சி செய்தது. அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது.

பிரியங்கா காந்தி


இந்தநிலையில், உத்தரப் பிரதேசத்தில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பிரியங்கா காந்திக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே, உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்திக்காவும், சோனியா காந்திக்காகவும் பிரியங்கா பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, ராகுல் காந்தியுடன் இணைந்து பேரணியில் ஈடுபட்டுள்ளார். லக்னோவின் வீதிகளில் திறந்த வாகனத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தே ஆகியோர் பேரணியாகச் செல்கின்றனர். அவர்களுக்கு, ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்துவருகின்றனர். பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு, பிரியங்கா காந்தியின் முதல் பொது நிகழ்ச்சி என்பதால் அரசியல் வட்டாரத்தில் கூர்மையாக கவனிக்கப்படுகிறது.

Also see:

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...