பிரியங்கா காந்தியைச் சந்திக்க விரும்பும் பா.ஜ.க வேட்பாளர்!

நான் இருக்கும் பகுதிக்கு அருகில் பிரியங்கா காந்தி வந்தால், அவரைச் சந்திப்பதற்கு நான் செல்வேன். ஆனால், ராகுல் காந்தியைச் சந்திக்கமாட்டேன்.

Web Desk | news18
Updated: April 4, 2019, 9:25 PM IST
பிரியங்கா காந்தியைச் சந்திக்க விரும்பும் பா.ஜ.க வேட்பாளர்!
பிரியங்கா காந்தி
Web Desk | news18
Updated: April 4, 2019, 9:25 PM IST
பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர். நான், அவரை மிகவும் அழகானவர் என்று குறிப்பிடுவதால் நான் ஆபாசமாக பேசியதாக அர்த்தம் கிடையாது என்று பா.ஜ.க சார்பில் கன்னூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.கே.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் வயநாட்டில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு சென்றார். அவருடன், பிரியங்கா காந்தியும் உடன் சென்றார். இந்தநிலையில், பிரியங்கா காந்தி குறித்து பா.ஜ.க வேட்பாளரும் மூத்த தலைவருமான சி.கே.பத்மநாபன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவர், ‘பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர்.

நான் இருக்கும் பகுதிக்கு அருகில் பிரியங்கா காந்தி வந்தால், அவரைச் சந்திப்பதற்கு நான் செல்வேன். ஆனால், ராகுல் காந்தியைச் சந்திக்கமாட்டேன். பிரியங்கா காந்தியின் மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவது தவறானது அல்ல. ஆனால், தேர்தல் என்பது அழகுக்கான போட்டி அல்ல. பிரியங்கா காந்தியை நான் அழகாக இருக்கிறார் என்று கூறுவது ஆபாசமானது கிடையாது’ என்று தெரிவித்தார்.

மற்றொரு பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன், ‘48 வயதான பிரியங்கா காந்தியை அழகானவர் என்று கூறுகின்றனர்’ என்று விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த பத்மநாபன், ‘அழகு என்பது வயதைப் பொறுத்தது அல்ல. எனக்கு 70 வயது. கட்சி உறுப்பினர்கள், நான் இளமையாக இருப்பதாக குறிப்பிடுவார்கள். இளமையாக இருப்பது என்பது, மனதளவில் நாம் இளமையாக இருக்கிறோமோ இல்லையா என்பதைப் பொறுத்தது’ என்று தெரிவித்தார்.

ஐ.பி.எல் விவரம்:


Loading...



Also see:

First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...