காங்கிரசில் இருந்து பிரியங்கா சதுர்வேதி விலகல்... சிவசேனாவில் இணைய வாய்ப்பு

மதுராவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சில கட்சி நிர்வாகிகள் தவறாக நடக்க முயன்றதாக பிரியங்கா சதுர்வேதி கூறியிருந்தார்.

news18
Updated: April 19, 2019, 1:36 PM IST
காங்கிரசில் இருந்து பிரியங்கா சதுர்வேதி விலகல்... சிவசேனாவில் இணைய வாய்ப்பு
பிரியங்கா சதுர்வேதி
news18
Updated: April 19, 2019, 1:36 PM IST
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா சதுர்வேதி திடீரென விலகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி, மதுராவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சில கட்சி நிர்வாகிகள் தவறாக நடக்க முயன்றதாக கூறியிருந்தார்.

இதனை அடுத்து, சில நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், உள்ளூர் காங்கிரசின் அழுத்தத்தால் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.

இதனால், அதிருப்தி அடைந்த பிரியங்கா சதுர்வேதி, தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

இதற்கான கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் அனுப்பியுள்ளார்.

பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Loading...தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...