காங்கிரசில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்த பிரியங்கா சதுர்வேதி!

பிரியங்கா சதுர்வேதி, தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் நேற்று விலகினார்.

news18
Updated: April 20, 2019, 9:08 AM IST
காங்கிரசில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்த பிரியங்கா சதுர்வேதி!
சிவசேனாவில் இணைந்த பிரியங்கா சதுர்வேதி
news18
Updated: April 20, 2019, 9:08 AM IST
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாள பதவியில் இருந்து விலகிய பிரியங்கா சதுர்வேதி, நேற்றைய தினமே சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி, மதுராவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது சில கட்சி நிர்வாகிகள் தவறாக நடக்க முயன்றதாக கூறியிருந்தார்.

இதனை அடுத்து, சில நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், உள்ளூர் காங்கிரசின் அழுத்தத்தால் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.
இதனால், அதிருப்தி அடைந்த பிரியங்கா சதுர்வேதி, தனது பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியில் இருந்தும் நேற்று விலகினார்.

இதற்கான கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் அனுப்பினார். நேற்றைய தினமே, பிரியங்கா சதுர்வேதி, சிவசேனா கட்சியில் தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இணைந்தார்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Loading...



Also See...

First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...